Breaking News

காஞ்சிபுரம் மாநகராட்சியில் ரூ.7.82 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள், பாலம் மற்றும் சாலை பணிகள் திறப்பு

காஞ்சிபுரம் பெருநகராட்சியாக 51 வார்டுகள் இருந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டு 51 வார்டுகளை நான்கு மண்டலமாக பிரித்து மண்டல வாரியாக அலுவலகங்கள் புதிதாக கட்டப்பட்டன.

தலா ரூ.13 லட்சத்தில் மதிப்பில்  கச்சபேஷ்வரர் கோவில் மாடவீதி மண்டலம் 1 அலுவலகம், மடப்பள்ளி தெருவில் மண்டலம் 2 அலுவலகமும், விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் மண்டலம் 3 அலுவலகமும், செவிலிமேடு பகுதியில் மண்டலம் 4 அலுவலகம் என புதிய கட்டப்பட்ட 4 மாநகராட்சி மண்டல அலுவலக கட்டிடத்தை மண்டல தலைவர் முன்னிலையில் உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் திறந்து வைத்தார். 

மண்டல 4 அலுவலகம் அலுவலக திறப்பு விழாவை ஒட்டி தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருது பிரியாணி வழங்கி சிறப்பித்தனர்.

பின் மாநகராட்சிக்கு உட்பட்ட வேகவதி ஆற்றின் கரையோரம் ரூ.5 கோடி மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணியினை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். 



அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரிடம் அப்பகுதியில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருவதால் மின்மாற்றியை மாற்றி தரும்படி கோரிக்கை வைத்தனர் அப்போது பதில் அளித்த சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் இதுவரை நாம் பொறுப்பேற்று 100 இடங்களில் மின் இணைப்பு பிரச்சனையை சரி செய்து புதிய மின்மாற்றியை வழங்கி வந்ததாகவும் இந்த பிரச்சனை இதுவரை என் கவனத்திற்கு வரவில்லை எனவும் நீங்கள் என்னிடம் கேட்பது வயிற்று எரிச்சலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் இதனை உடனடியாக சரி செய்து தரப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.










No comments

Thank you for your comments