உலக முதலீட்டாளர் மாநாடு – 2024, இலச்சினை அறிமுக விழா நேரலை
உலக முதலீட்டாளர் மாநாடு – 2024, இலச்சினை அறிமுக விழா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழா நேரலையாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ் அவர்கள் தலைமையில் ஒளிபரப்பப்பட்டது.
உலக முதலீட்டாளர் மாநாடு – 2024 இலச்சினை அறிமுக விழா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழா நேரலையாக இன்று (10.08.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ் அவர்கள் தலைமையில் ஒளிபரப்பப்பட்டது.
தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாடு - 2024 (GIM-2024) வருகிற 2024 ஜனவரி 7 மற்றும் 8 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. இதன் முதல் நிகழ்வாக ஆகஸ்ட் 10, 2023 அன்று மாலை 6.30 மணிக்கு GIM 2024 ன் இலச்சினை அறிமுக விழா நிகழ்ச்சி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழா நேரலையாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் ஒளிபரப்பப்பட்டது.
அதற்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க நிர்வாகிகளுடன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கான தேவைகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் ஆலோசனை நடத்தினார்.
இதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் தாம் சந்திக்கும் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், தொழில் மற்றும் வணிகம் பெருகவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு. வெங்கடேஷ் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வட்டார மேலாளர் திரு.சிக்ரிலால், சிட்கோ கிளை மேலாளர் திருமதி.ஜெயந்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.திலீப், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க பிரதிநிதிகள், கைவினை பொருள் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள், வங்கி மேலாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments