தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் விருதுகள் 2022 பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளதாவது,
தமிழ்நாடு அரசு, சுற்றுச்Nழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிக்கட்டுரை ஆகிய பிரிவுகளில் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் தனிநபர்கள், தன்னார்வ நிறுவனங்கள், வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. தற்போது 2022 - ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் விருதுக்களுக்கான விண்ணப்பங்கள் கீழ்கண்ட இனங்களில் வரவேற்கப்படுகின்றன.
வ.எண் | விருதுகளின் விவரம் | தகுதியுடைய நபர்கள் |
1. | சுற்றுச்Nழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு . முதல் பரிசு –ரூ. 15,000/- இரண்டாம் பரிசு –ரூ.10,000/- மூன்றாம் பரிசு– ரூ.7,500/- | சுற்றுச்Nழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள் / கல்வியாளர்கள் /தனிநபர்கள் . |
2. | சுற்றுச்Nழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை - தனிநபர் முதல் பரிசு – ரூ.15,000/- இரண்டாம் பரிசு – ரூ.10,000/- மூன்றாம் பரிசு – ரூ.7,500/- | அ) சுற்றுச்Nழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணிகளில் சிறந்து விளங்கும் தனிநபர்கள் . |
3. | சுற்றுச்Nழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை - நிறுவனம் · முதல் பரிசு – ரூ.15,000/- · இரண்டாம் பரிசு– ரூ.10,000/- · மூன்றாம் பரிசு – ரூ.7,500/- | ஆ) சுற்றுச்Nழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணிகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள். |
4. | சுற்றுச்Nழல் ஆராய்ச்சி கட்டுரை. பரிசுத் தொகை – ரூ.15,000/- | சுற்றுச்Nழலின் சிறந்த மேலாண்மைக்கு வித்திடும் ஆராய்ச்சியாளர்கள் / ஆராய்ச்சி நிறுவனங்கள் . |
இவ்விருதுகளுக்குரிய விண்ணப்படிவங்களை www.environment.tn.nic.in வளையதளத்தில் 15.08.2023 வரை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஆறு நகல்களில் இயக்குநர், சுற்றுச்Nழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை (Director, Department of Environment and Climate Change) என்ற பெயரில் ரூ.100/- க்கான கேட்புக் காசோலையுடன் மூன்று புகைப்படங்களையும் (Passport size Photos), இணைத்து இயக்குநர், சுற்றுச்Nழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை தரைதளம், பனகல்மாளிகை, சைதாப்பேட்டை சென்னை 600 015 என்ற முகவரிக்கு 21.08.2023 அன்று மாலை 5.00 மணிக்குள்ளாக தபால் மூலம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
மேலும் விவரங்களுக்கு www.environment.tn.nic.in மற்றும் தொலை பேசி எண்.24336421 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments