Breaking News

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பதிவுத்துறை ஊழியர்கள் இருவர் கைது

காஞ்சிபுரம்,ஆக.25:

காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் ரத்து செய்வதற்கு ரூபாய் 2 லட்சம் லஞ்சம் கேட்டு முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் பெறற பதிவுத்துறை ஊழியர் நவீன் குமார் மற்றும் அலுவலக தற்காலிக உதவியாளர் சந்தோஷ்பாபு காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த பத்மாவதி தந்தை சொத்தினை பத்மாவதி, சகோதரர் பச்சையப்பன் ஆகியோருக்கு நிலத்திற்கான பவர் பத்திரம் வழங்கியுள்ளார்.



இதனை தொடர்ந்து பச்சையப்பன் போலி ஆவணங்கள் மூலம் இந்த சொத்தினை அபகரித்து விற்பனை செய்துள்ளார்.  சில காலத்திற்குப் பிறகு இதனை அறிந்த பத்மாவதியின் மருமகன் உலகநாதன் இம்மோசடியை அறிந்து இதனை ரத்து செய்ய கோரி காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இதில் காலதாமதம் ஏற்பட்டதால் நீதிமன்றத்தை நாடி இதற்கான உத்தரவை பெற்று அதனை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்த நிலையில் மீண்டும் பத்திரம் பெறுவதற்கு மாவட்ட பதிவாளர் அலுவலக ஊழியர் நவீன்குமார் ரூபாய் 2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதை அளிக்க மனமில்லாத பத்மாவதியின் அண்ணன் அன்பழகன் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரினை பெற்று டிஎஸ்பி கலைச்செல்வன் கூறிய அறிவுரைகள் வழங்கி அவர் கேட்ட லஞ்சத்தின் முன் பணமாக ரூபாய் ஒரு லட்சம் வழங்க ஒப்புதல் தெரிவிப்பதாகவும் அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியபோது, டி.எஸ்.பி. தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவினர், நவீன்குமார் அறிவுரையின் அடிப்படையில் தற்கால ஊழியராக பணிபுரிந்து வரும் சந்தோஷ்பாபுவிடம் அளித்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இருவரையும் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூபாய் இரண்டு லட்சம் கேட்டு அதற்கு முன்பணமாக ரூபாய் ஒரு லட்சம் பெற்ற நிலையில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது




 

No comments

Thank you for your comments