Breaking News

03-08-2023-ம் தேதி ராசி பலன்கள்


 

மேஷம்  :

சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த  சோர்வு குறையும். கடன்களை தீர்ப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். எதையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

  • v  அஸ்வினி : முயற்சிகள் அதிகரிக்கும்.
  • v  பரணி : சோர்வு குறையும்.
  • v  கிருத்திகை : பக்குவம் ஏற்படும்.


ரிஷபம் :

புதிய வியாபாரம் சார்ந்த அறிமுகம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பயணங்கள் மேம்படும். வீடு பராமரிப்பு தொடர்பான காரியங்கள் நிறைவேறும். விவசாய பணிகளில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

  • v  கிருத்திகை : அறிமுகம் உண்டாகும்.
  • v  ரோகிணி : ஒத்துழைப்பான நாள்.
  • v  மிருகசீரிஷம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

 

மிதுனம் : 

அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

  • v  மிருகசீரிஷம் : தாமதம் ஏற்படும்.
  • v  திருவாதிரை : ஈடுபாடு உண்டாகும்.
  • v  புனர்பூசம் : சாதகமான நாள்.

 

 

கடகம்  :

உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குழந்தைகளை பற்றிய கவலைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். குழப்பங்களால் சில தடுமாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் வாதங்களை தவிர்க்கவும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

  • v  புனர்பூசம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
  • v  பூசம் : கவனம் வேண்டும்.
  • v  ஆயில்யம் : வாதங்களை தவிர்க்கவும்.

 


சிம்மம்  : 

சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

  • v  மகம் : வெற்றி கிடைக்கும்.
  • v  பூரம் : ஆதாயம் மேம்படும்.
  • v  உத்திரம் : மதிப்பு அதிகரிக்கும்.

 

கன்னி  : 

சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் பொறுமையுடன் இருக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த கவலைகள் ஏற்பட்டு நீங்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

  • v  உத்திரம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
  • v  அஸ்தம் : சாதகமான நாள்.
  • v  சித்திரை : கவலைகள் நீங்கும்.

 

துலாம்  :

மூத்த சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கலை சார்ந்த துறைகளில் மதிப்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரமான செலவுகளை தவிர்ப்பீர்கள். புதுமையான சிந்தனைகள் மனதில் தோன்றும். குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். சலனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

  • v  சித்திரை : மதிப்பு அதிகரிக்கும்.
  • v  சுவாதி : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
  • v  விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.

 

விருச்சிகம்  :

கடன் சார்த்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். சொத்து வாங்குவது குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

  • v  விசாகம் : நெருக்கடிகள் குறையும்.
  • v  அனுஷம் : உயர்வான நாள்.
  • v  கேட்டை : மகிழ்ச்சி உண்டாகும்.

 

தனுசு  : 

பிள்ளைகளின் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிப்பது அவசியமாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உதவிகள் கிடைக்கும் நாள். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

  • v  மூலம் : சுபமான நாள்.
  • v  பூராடம் : பொறுமை வேண்டும்.
  • v  உத்திராடம் : பிரச்சனைகள் முடியும்.

 

மகரம்  : 

குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மதிப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

  • v  உத்திராடம் : சிந்தித்துச் செயல்படவும்.
  • v  திருவோணம் : ஆரோக்கியம் மேம்படும்.
  • v  அவிட்டம் : ஆதாயகரமான நாள்.

 

கும்பம் :

சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். நண்பர்களின் ஆலோசனைகளால் நன்மை உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகத்தின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளில் உள்ள உண்மை நிலையை அறிந்து முடிவெடுக்கவும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

  • v  அவிட்டம் : நன்மை உண்டாகும்.
  • v  சதயம் : மாற்றம் ஏற்படும்.
  • v  பூரட்டாதி : மந்தமான நாள்.

 

மீனம்  :  

உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். தந்தை வழி உறவுகளால் அலைச்சலும், அனுகூலமும் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

  • v  பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
  • v  உத்திரட்டாதி : அறிமுகம் உண்டாகும்.
  • v  ரேவதி : அனுகூலம் பிறக்கும். 

No comments

Thank you for your comments