(TNPSC) தொகுதி-1 & (TNPSC) தொகுதி-2 இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது,
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) விரைவில் அறிவிக்கப்படவுள்ள தொகுதி-1 மற்றும் தொகுதி-2 முதல் நிலை தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்மையத்தில் 17.07.2023 முதல் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டி தேர்வாளர்கள் மற்றும் வேலை நாடுநர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், மற்றும் ஆதார் அட்டை ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் காஞ்சிபுரம் மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments