காலியிட அறிவிப்புச் சட்டத்தின் கீழ் ER-1 Form பூர்த்தி செய்ய வேண்டும்... ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தல்
அவ்வாறு அறிக்கையினை அனுப்பி வைப்பது அந்தந்த நிறுவனங்களின் பொறுப்பாகும். அறிக்கை அனுப்பாத நிறுவனங்களின் மீது கட்டாயக் காலியிட அறிவிப்புச் சட்டம் 1960-ன்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் வழிமுறைகள் உள்ளன.
நிறுவனங்கள் இ.ஆர் 1 படிவத்தில் ஆண், பெண் மொத்தம் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து இவ்வலுவலகத்திற்கு அனுப்பும்படியும் மற்றும் அதே விவரத்தினை இணையதள முகவரியான www.employmentexchange.tn.gov.in/Empower-ல் உள்ளீடு செய்து தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் அஞ்சல் முகவரியில் குறிப்பிட்டுள்ள அடையாள சொல்லான (User -ID, VLD0000000--) மற்றும் கடவுச் சொல்லான abcd1234 (Password) கொண்டு Employer Market info என்ற இடத்தில் Click செய்து ER-1 Form Entry என்ற menu-வில் சென்று Employer Details என்று குறிப்பிடப்பட்டதற்கு கீழ் Current Quarter என்ற கலத்தில் ஆண், பெண் மொத்தம் என்ற விவரத்தினை குறிப்பிட்டு அதன் கீழ் குறிப்பிட்டுள்ள கலங்களையும் பூர்த்தி செய்து save செய்ய வேண்டும்.
தற்போது தனியார் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் 30.06.2023 முடியும் காலத்திற்கான இ.ஆர் - 1 அறிக்கைகளை வேலூர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments