Breaking News

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நோட்டுபுத்தகங்கள் வழங்கினார் சமூக ஆர்வலர் ஆர் . வி. ரஞ்சித் குமார்

 காஞ்சிபுரம்  :

இன்று காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் உயர் தரமான படங்களுடன் கூடிய  ரூ.70,000 மதிப்புள்ள நோட்டுப் புத்தகங்களை அரசு ஆரம்பப் பள்ளி ஏழை எளிய மாணவர்களுக்கு வழங்கினார்.


இன்று தமிழக அரசின் முன்னாள் முதல்வரும் ,  பெருந்தலைவர் என அழைக்கப்படும் காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. 

கடன் செயலி (LOAN APP) மோசடி 

இதன் தொடர்ச்சியாக  காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான ஆர் . வி.  ரஞ்சித் குமார் அவர்கள் கலியனூர் பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தரமான விலை உயர்ந்த தனியார் பள்ளியில் வழங்கப்படும் நோட்டுகளுக்கு நிகரான நோட்டு புத்தகங்களை வழங்கினார் . 


கலியனூர் அரசு ஆரம்பப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 70 ஆயிரம் மதிப்புள்ள நல்ல தரமான படங்களும் கூடிய நோட்டு புத்தகங்களை வழங்கிவிட்டு பின்னர் பள்ளி வளாகத்தில்  மரம் நடு விழா நடைபெற்றது. 

இந்தியாவிலேயே முதன்முறையாக TEALS திட்டம் 
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இதில் கலந்துகொண்டு  மரம் கன்றுகள் நடப்பட்டன

No comments

Thank you for your comments