காமராஜ் நினைவு அறக்கட்டளை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
காஞ்சிபுரம் காமராஜர் நினைவு அறக்கட்டளை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள காமராஜ் திருவுருவ சிலைக்கு காமராஜர் பிறந்த நாளை ஒட்டி பல்வேறு தரப்பினர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்து கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் காமராஜ் நினைவு அறக்கட்டளை சார்பில் காஞ்சி நாடார் சங்கத்துடன் இணைந்து சங்கத் தலைவர் ராமேஸ்வரம் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காமராஜருக்கு புது ஆடைகள் அணிவித்து மலர் மாலைகள் அணிவித்து கொண்டாடினர்.
இதில் செயலாளர் வேலுமணி பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வைகித்தனர் இதில் சிறப்பு குருவி மேளம் முழங்க கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது
இதில் காஞ்சிபுரம் மாவட்ட நாடார் பேரவை சார்பில் தலைவர் ரமேஷ் செயலாளர் செல்வராஜ் பொருளாளர் ராஜகோபால். ராஜசேகர். பாலகுமார் ஏசி குமார் ரத்தின பலவேசம் கவாஸ்கர் வாலாஜாபாத் ஆல்பர்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பொது மக்களுக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் கொடுத்து கொண்டாடப்பட்டது.
No comments
Thank you for your comments