Breaking News

மணிப்பூர் கலவரத்தை தடுக்கத் தவறிய ஒன்றிய அரசை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் ஜூலை 24-            

தாய்மையை நிர்வாணப்படுத்தி தலைகுனிய வைத்த மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் காவலன் கேட்ட அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 

மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் செல்வி ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட தொண்டர் மகளிர்  அமைப்பாளர் எஸ். மாலதி வரவேற்று பேசினார். நிர்வாகிகள் சாந்தா, விஜயலட்சுமி ராபர்ட், தேவிகா, கற்பகம்,பூக்கொடி பழனி, சத்தியபாமா, ரத்தினமாலா, விஜயா புருஷோத்தமன், பத்மாவதி, கண்ணகி, சம்யுக்தா, பவ்யா, ராஜலட்சுமி குஜராத், ஜெயந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இதில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ  காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல் ஏழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,  மாவட்ட துணை செயலாளர்கள் இனிய அரசு, கோகுல கண்ணன் மலர்விழி ,மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், மாநகர செயலாளர் தமிழ் செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம் எஸ் சுகுமார்,  ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார்,  குமணன், படு நெல்லி பாபு ,சேகர், ஞானசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ். ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் நித்யா சுகுமார் செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி தலைவர் செம்பருத்தி மதுர்கேஷ், ஒன்றிய குழு துணைத் தலைவர்கள் திவ்யப்ரியா இளமது, வசந்தி குமார், சுப்புலட்சுமி பாபு, பத்மா பாபு இல்லாமல்லி ஸ்ரீதர், உள்ளிட்ட ஏராளமான மகளிர் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர மகளிர் அணி அமைப்பாளர் விஜயாரவி நன்றி கூறினார்.



No comments

Thank you for your comments