சட்ட மாமேதை அம்பேத்கருடைய திருவுருவ படத்தை வைக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம்
- நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர், படங்களைத் தவிர வேறு யாருடைய படங்களையும் வைக்கக் கூடாது என உயர் நீதிமன்ற பதிவாளரின் சுற்றறிக்கையை கண்டித்து காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் திடீர் சாலை மறியல்.
- சட்ட மாமேதை அம்பேத்கருடைய திருவுருவ படத்தை வைக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி திருவள்ளுவர் படங்களைத் தவிர வேறு யாருடைய படங்களையும் வைக்க கூடாது என உயர் நீதிமன்ற பதிவாளர் மாவட்ட நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
நீதிமன்றங்களில் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்ட மாமேதை அம்பேத்கருடைய திருவுருவ படத்தையோ சிலையையோ வைக்க கூடாது என மறைமுகமாக உயர் நீதிமன்ற பதிவாளர் மாவட்ட நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ள உயர் நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கையை கண்டித்தும், நீதிமன்றங்களில் சட்ட மாமேதை அம்பேத்கருடைய படத்தையும், திருவுருவ சிலையையும் அமைக்க அனுமதிக்க வேண்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென காஞ்சிபுரம் காமராஜர் வீதி சாலையில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர்களின் திடீர் சாலை மறியல் காரணமாக காஞ்சிபுரத்தின் முக்கிய சாலையான காமராஜர் சாலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
No comments
Thank you for your comments