Breaking News

வேகவதி ஆற்றின் கரையோரம் ஆக்கமிப்பு வீடுகள் இடிக்கும் பணியை நிறுத்த கோரி திமுக கவுன்சிலர் வீடு முற்றுகை

 காஞ்சிபுரம் :

வேகவதி ஆற்றின் கரையோரம் ஆக்கமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 78 வீடுகள் இடிக்கும் பணி நடைபெறுவதால் தடுத்து நிறுத்த கோரி திமுக கவுன்சிலர் வீட்டை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி வழியாக செல்லும் வேகவதி ஆற்றில் கரையோரம் இரு புறங்களையும் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் வேகவதி ஆற்றில் கரைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்ற நிலையில் அங்கு குடியிருந்த மக்களுக்கு கீழ்கதிப்பூர் பகுதியில் தமிழ் நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வழங்கப்பட்டு உள்ள வீடுகளில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை காலி செய்யாமல் அப்படியே வைத்திருந்தனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வேகவதி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியை நீர்வளத் துறை அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாயார் குளம் பகுதியில் உள்ள அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து காலி செய்யாமல் உள்ள 78 வீடுகளை ஜேசிபி உதவியுடன் இடித்து அகற்றும் பணியை கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது.

ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகள் அகற்றப்படுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 32 மற்றும் 48 வது வார்டு உட்பட்ட மந்தவெளி, நாகலத்து மேடு, நாகலத்து தெரு போன்ற பகுதிகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் வீடை இடிக்கும் பணிகள் துவங்கின நிலையில் அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாநகராட்சி 48 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திமுக கவுன்சிலர் கார்த்திக் அவர் வீட்டை முற்றுகையிட்டு வீடு இடிக்கும் பணியை தடுத்து நிறுத்த கோரி போராட்டத்தை ஈடுபட்டனர். 

கடன் செயலி (LOAN APP) மோசடி 

திடீரென நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி கவுன்சிலர் வீட்டை முற்றுகையிட்டதால் தகவல் அறிந்து வந்த விஷ்ணு காஞ்சி காவலர் போராட்டக்காரர்களிடையே பேச்சுவார்த்தை நடத்திய பின் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

No comments

Thank you for your comments