முன்மாதிரியான நியாய விலை கடைகளில் கூட்டுறவு சங்க பதிவாளர் மருத்துவர் சுப்பையன் தீடீர் ஆய்வு
காஞ்சிபுரம் கூட்டுறவு சங்க தமிழக முன்மாதிரியான நியாய விலை கடைகளில் கூட்டுறவு சங்க பதிவாளர் மருத்துவர் சுப்பையன் இ. ஆ. ப பார்வையிட்டு தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 602 நியாய விலை கடை, 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், 7 நகர கூட்டுறவு சங்கம், 10 மருந்தகங்கள் என்ன கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கூட்டுறவு சங்கங்கள் கீழ் இயங்குகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 48வது வார்டு டெம்பிள் சிட்டி பகுதியில் உள்ள தமிழகத்திலேயே முதல்முறையாக முன்மாதிரியான நியாய விலை கடைகளில் இன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக கூட்டுறவு சங்க பதிவாளர் மருத்துவர். ந.சுப்பையன் இ.ஆ.ப பார்வையிட்டு கூட்டுறவு சங்க அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய அரிசி, பருப்பு, சக்கரை போன்றவற்றில் தரம் குறித்தும் பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்கள் எடை போடுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்க வங்கிகள், பெட்ரோல் பங்க், கூட்டுறவு சங்க மருந்தகம் போன்ற கூட்டுறவு சங்கங்கள் கீழ் இயங்கும் கடைகளில் பதிவாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, கூட்டுறவு சங்க அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானர் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments