Breaking News

02-07-2023 ம் தேதி ராசி பலன்கள் - பஞ்சாங்கம்

 



ஆனி 17 - ஞாயிற்றுக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 5:50 AM

சூரியஸ்தமம் - 6:35 PM

சந்திரௌதயம் - Jul 02 5:42 PM

சந்திராஸ்தமனம் - Jul 03 5:14 AM


அசுபமான காலம்

இராகு - 4:59 PM – 6:35 PM

எமகண்டம் - 12:12 PM – 1:48 PM

குளிகை - 3:24 PM – 4:59 PM

துரமுஹுர்த்தம் - 04:53 PM – 05:44 PM

தியாஜ்யம் - 09:35 AM – 11:01 AM


சுபமான காலம்

அபிஜித் காலம் - 11:47 AM – 12:38 PM

பிரம்மா முகூர்த்தம் - 04:14 AM – 05:02 AM


இன்று என்ன செய்யலாம் :

மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு ஏற்ற நாள்.

மந்திரம் பயிலுவதற்கு உகந்த நாள்.

வாகனம் பழகுவதற்கு நல்ல நாள்.

கால்நடைகளை வாங்கி, விற்பதற்கு ஏற்ற நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரம் :  பரணி, கிருத்திகை

வழிபாடு : சூரியனை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும்.



மேஷம்  :  தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். நெருக்கமானவர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். விவேகமான செயல்பாடுகள் நன்மையை ஏற்படுத்தும். எதிர்பார்த்த சில பயணங்களில் காலதாமதம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்


அஸ்வினி : அனுபவம் கிடைக்கும். 

பரணி : விட்டுக்கொடுத்துச் செல்லவும். 

கிருத்திகை : நன்மையான நாள்.



ரிஷபம் : பயனற்ற வாக்குறுதிகளை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட விதத்தில் முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் மாற்றத்தை ஏற்படுத்தும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும். 

ரோகிணி : இலக்குகள் பிறக்கும்.

மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.



மிதுனம் :  பணி நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பயணங்களின் மூலம் அனுபவம் அதிகரிக்கும்.  உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பழகும் விதத்தில் மாற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்


மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும்.  

திருவாதிரை : ஆதரவான நாள்.

புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.



கடகம்  :    மனதில் புதிய திட்டங்களை உருவாக்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அநாவசிய செலவுகளை குறைப்பீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். போட்டி மனப்பான்மையின்றி செயல்படவும். மறைமுகமான விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். எதிர்ப்புகள் விலகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


புனர்பூசம் : ஆதரவான நாள்.

பூசம் : புரிதல் அதிகரிக்கும்.

ஆயில்யம் : சூட்சுமங்களை அறிவீர்கள். 



சிம்மம்  :  கல்வி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். கலைப் பொருட்கள் மீதான ஈர்ப்பு மேம்படும். வியாபாரத்தில் செய்யும் சில மாற்றங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். மனை விற்றல், வாங்கலில் மேன்மை ஏற்படும். குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத தனவரவால் சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வரவுகள் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


மகம் : ஆதாயம் ஏற்படும். 

பூரம் : லாபம் அதிகரிக்கும். 

உத்திரம் : ஆரோக்கியம் மேம்படும்.



கன்னி  :   மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். உறவினர்களின் வழியில் செல்வாக்கு உயரும். புதிய ஒப்பந்தங்களால் லாபம் ஏற்படும். அலுவலகத்தில் திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். தடைகள் அகலும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


உத்திரம் : செல்வாக்கு உயரும். 

அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

சித்திரை : மதிப்பு அதிகரிக்கும்.



துலாம்  : குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் உற்சாகம் ஏற்படும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


சித்திரை : மகிழ்ச்சியான நாள்.

சுவாதி : அனுசரித்துச் செல்லவும்.

விசாகம் : துரிதம் ஏற்படும். 



விருச்சிகம்  :   உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களைப் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். வாக்குறுதி அளிக்கும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். இணைய முதலீடுகளில் முன்னேற்றம் உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


விசாகம் : மாற்றம் ஏற்படும். 

அனுஷம் : கருத்துகளை தவிர்க்கவும்.

கேட்டை : முன்னேற்றம் உண்டாகும். 



தனுசு  :  சிந்தனையின் போக்கில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். போட்டி மனப்பான்மையை குறைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணைவர் பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். புதியவர்களை நம்பி முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உலகியல் நிகழ்வுகளில் புதிய கண்ணோட்டம் ஏற்படும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்


மூலம் : குழப்பம் நீங்கும்.

பூராடம் : நெருக்கடியான நாள்.

உத்திராடம் : சோர்வு உண்டாகும்.



மகரம்  :  பழைய அனுபவங்களால் மகிழ்ச்சி உண்டாகும். இறை சார்ந்த பயணங்கள் கைகூடும். சகோதரர்களால் பயனடைவீர்கள். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தைரியமான சில முடிவுகளால் மாற்றம் பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும். 

திருவோணம் : ஆதரவான நாள்.

அவிட்டம் : மாற்றம் பிறக்கும்.



கும்பம் :   செயல்களில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இலக்கிய துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் சேமிப்பு குறையும். அரசு வழியில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். சோர்வு விலகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


அவிட்டம் : சுறுசுறுப்பான நாள்.

சதயம் : அனுபவம் ஏற்படும். 

பூரட்டாதி : இழுபறிகள் மறையும். 



மீனம்  :   கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாள் செல்ல நினைத்த இடங்களுக்கு சென்று வருவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகளால் புதிய பாதைகள் புலப்படும். களிப்புகள் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும். 

உத்திரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும். 

ரேவதி : ஆலோசனைகள் கிடைக்கும்.

No comments

Thank you for your comments