மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களுக்கு இ-சேவை தளத்தில் விண்ணப்பிக்கலாம்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இ-சேவை தளம் வழியாக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிப்பதற்கு இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இ-சேவை தளம் வழியாக மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிப்பதற்கு இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்தளம் வாயிலாக தற்போது 5 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பம், வங்கி கடன் மானிய விண்ணப்பம், திருமண உதவித்தொகை விண்ணப்பம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை விண்ணப்பம் போன்ற விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கவும், மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தினை போக்கவும், விண்ணப்பித்த விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை உடனடியாக தெரிந்து கொள்ளும் வண்ணம் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கவும் அல்லது http://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள 5 திட்டங்களில் பயன்பெற ஜ~லை-2023 மாத இறுதி வரை இ-சேவை மூலமாகவும் அல்லது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட்-2023 முதல் மேற்காணும் திட்டங்களுக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments