Breaking News

இறைவன் சொத்து இறைவனுக்கே - அமைச்சர் சேகர் பாபு பேச்சு

காஞ்சிபுரம் : 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை விவகாரத்தில், சட்டப்படி பக்தர்கள் சுதந்திரமாக இறை வழிபாடு செய்ய தேவையான அனைத்து உதவிகளையும் இந்து சமய அறநிலையத்துறையும் அரசும் செய்து வருகிறது. 


இதில் யார் பெரியவர்கள் என்ற பிரச்சனை அல்ல, இறையன்பர்களுக்கு தேவையான தெய்வத்தை வழிபடுவதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கம்.

இறைவன் சொத்து இறைவனுக்கே என்று, ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான 250 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துக்களை மீட்ட வரலாறு திராவிட மாடல் ஆட்சிக்கு பாராட்டுக்குரிய பணியாகும்



கடன் செயலி (LOAN APP) மோசடி 
டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியில் கூறியதாவது, 

பஞ்சபூத ஸ்தலங்களில் பிரித்திவி ஸ்தலம் எனும் மண் ஸ்தலமாக விளங்குவது பழமையும், புராதனமும் உடையது, உலகப் பிரசித்தி பெற்றது காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில்.

திருக்கோவில் ஒன்பது நிலைகளைக் கொண்ட 192 அடி உயரமுடைய ராஜகோபுரத்துடன் சுமார் 24 ஏக்கர் பரப்பளவில் நான்கு பிரகாரங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

இத்தகைய சிறப்பினை உடைய திருக்கோவிலுக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் 17 ஆண்டு களுக்கு முன்பு நடைபெற்றுள்ளதுது.

இதனை அடுத்து ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான எண்பது திருக்கோவில்களுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்து குடமுழக்கு நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு 17 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேக விழா நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் திருப்பணிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது.  திருப்பணிகள் தொடங்குவதை ஒட்டி முதற்கட்டமாக ராஜ கோபுரம் பல்லவ கோபுரம் பகுதியில் உள்ள விகட சக்கர விநாயகர், பல்லவ கோபுர ஆறுமுகர், தம்பட்டை விநாயகர், விஷ்ணுவேஸ்வரர், ராஜ கோபுர விநாயகர், ராஜ கோபுர ஆறுமுகர் மற்றும் ராஜகோபுரம் ஆகியவற்றுக்கு பாலாலயம் நடைபெற்றது. 

பாலாலயத்தை ஒட்டி யாக சாலைகள் அமைத்து,200 க்கும் மேற்பட்ட கலசங்கள் வைத்து கோவில் அர்ச்சகர்கள் யாகசாலை பூஜை செய்து பாலாலயம் செய்து வைத்தனர்.

இதைத்தொடர்ந்து ஏகாம்பரநாதர் கோவிலில் நடைபெறும் திருப்பணிகள் துவக்க விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு கோவில் புனரமைக்கும் திருப்பணியை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது,  



சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை விவகாரத்தில், சட்டப்படி பக்தர்கள் சுதந்திரமாக இறை வழிபாடு செய்ய தேவையான அனைத்து உதவிகளையும் இந்து சமய அறநிலையத்துறையும் அரசும் செய்து வருகிறது. 

இதில் யார் பெரியவர்கள் என்ற பிரச்சனை அல்ல, இறையன்பர்களுக்கு தேவையான தெய்வத்தை வழிபடுவதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதுதான் எங்களுடைய நோக்கம்,

திருக்கோவிலுக்கு பக்தர்கள் நன்கொடை அளிக்க வசதியாக ஆன்லைன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது, திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நன்கொடை அளிக்க விரும்பினால் திருக்கோவிலுடைய அலுவலகத்திற்கு வந்து நன்கொடை அளிக்கலாம் அதற்கு உண்டான ரசீதுகள் முறையான கணக்குகளில் நன்கொடை வரவு வைக்கப்பட்டு அதற்கு உண்டான ரசிதுகள் வழங்கப்படும் ஆகவே திருக்கோவில்களுக்கு நன்கொடை அளிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை,

வாடகை பாக்கி வசூலிப்பதை பொறுத்த வரையில் இந்த ஆட்சி ஏற்படுத்தப்பட்ட பிறகு தான் இதுவரையில் 275 கோடி ரூபாய் நிலுவையில் இருந்த வாடகை பாக்கி வசூலிக்கப்பட்டு இருக்கிறது,

ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் தான் 250 கோடி ரூபாய் அளவிற்கு ஆக்கமிப்பிலிருந்த ஆறு பேர் மீது முறையாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த நிலங்களை மீட்டு இருக்கிறோம், முதல் முதலில் நிலம் மீட்பு நடவடிக்கை இங்கு தான் தொடங்கியது.

 ஆக்கிரமிப்புகளை எடுத்து இறைவன் சொத்து இறைவனுக்கே என்று ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான 250 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துக்களை மீட்ட வரலாறு திராவிட மாடல் ஆட்சிக்கு பாராட்டுக்குரிய பணியாகும் என செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

கோவில் திருப்பணிகள் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்பி க. செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர் மற்றும் எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் ,இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் வான்மதி, அறங்காவலர் குழுவினர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments