Breaking News

அதிக வேகம் வாகனங்களுக்கு கிடுக்குபிடி... மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிறப்புதணிக்கை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் மற்றும் சென்னை தெற்கு சரக இணை ஆணையர் முத்து ஆகியோர்களின் உத்தரவின் படி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையில் மோட்டர் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் மற்றும் கிருஷ்ணன் ஸ்ரீபெரும்புதூர் ஆகியோர் காஞ்சிபுரம் வெள்ளை கேட் அருகே கூட்டுதணிக்கை செய்தனர்.


அவ்வழியே ரேடார்கன் மூலம் அதிவேகமாக வரும் 31 வாகனங்களை கண்டறிந்து, 59,000/- அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர். 

அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் கூறுகையில், 

அதிவேகமே சாலை விபத்தில் உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது, சாலைகளில் பக்கவாட்டில் வட்டமாக பொருத்தப்பட்டிருக்கும் போக்குவரத்து சின்னத்தில் குறிப்பிடப்பட்ட வேக அளவில்தான் அந்தந்த பகுதியில் செல்லவேண்டும் என்றும் விளக்கமளித்தார். 

மேலும் தணிக்கையின்போது பெரும்பாலான ஓட்டுனர்கள் தாங்கள் சரியான வேகத்தில் தான் வந்தோம் என கூறி வாக்குவாதம் செய்தனர். பின்னர் ரேடாரின் வேக புகைப்படத்தை பார்த்தபின்தான் தம் தவற்றை உணர்ந்து, இனி இவ்வாறு செய்யமாட்டோம் என்று உறுதி எடுத்து சென்றார்கள்.

No comments

Thank you for your comments