பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு ... தொடரும் 365 வது நாள் போராட்டம்.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 365 வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி. தினகரன் தெரிவித்தாவது,
மக்கள் விரோதமாக எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் திமுக ஆட்சியில் வீழ்ச்சி தான் ஏற்படுத்தும், கடந்த ஆட்சி காலத்தில் எடப்பாடி. பழனிச்சாமி கொண்டு வந்த இந்த விமானம் திட்டதால் தான் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, எடுத்துக்காட்டு ஸ்டெர்லைட் போராட்டம், மீத்தேன் திட்டம் கையில் எடுத்ததால் தான் வீழ்ச்சி ஏற்பட்டது,
தேர்தல் நேரங்களில் ஆட்சிக்கு வரும்போது பொய்யான வாக்குறுதியை கொடுத்து திமுக அரசு மகளிர் உரிமை திட்டத்தை கொண்டு வந்து அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும் அறிவித்துவிட்டு அதற்கு நான் தனியாக பிரித்ததால் தமிழ்நாடு கேள்வி கேட்பதால் இந்த திட்டத்தை காமெடியாக பார்க்கிறார்கள்,
கொடநாட்டில் கொலை, கொள்ளை நடைபெற்று காவல் ஆலய கொலை செய்துவிட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது இதனை கண்டுபிடித்தால் உண்மையான குற்றவாளிகள் யார் என்று தெரிந்துவிடும் என்பதற்காக பயத்தில்தான் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசி வருகிறார்.
ஆக.20 இல் எடப்பாடி பழனிச்சாமி மாநாடு குறித்து கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களின் வரி பணம் அதிக அளவில் கையாண்டு உள்ளனர், ஆகையால் மாநாட்டிற்கு ஒருவருக்கு ரூ.1000 மற்றும் பிரியாணி வழங்குவார்கள் ஆகையால் மக்களின் மக்களுக்கே போய் சேரட்டும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒன்றிணைந்து செயல்படும் என சசிகலா கூறிய நிலையில் அவர்கள் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்கள் அவர்கள் அப்படிதான் கூறுவார்கள்.
ஆனால் அமமுக நாங்கள் சொல்லவில்லை, அதிமுக எடப்பாடி கம்பெனிகள் தான் அமமுகவில் சேரவேண்டும் என்றால் அவர்கள் தான் மன்னிப்பு கடிதம் கொடுத்து அமமுகவில் சேரவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments