பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிற்கல்வி வகுப்பு ஆசிரியர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிற்கல்வி வகுப்பு ஆசிரியர் நெஞ்சுவலி காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மிலிட்டரி ரோடு பகுதியில் பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல்(53) என்பவர் காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ். ஸ்ரீனிவாசன் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் தொழிற்கல்வி வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் இப்பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த நிலையில் இன்று வழக்கம் போல் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்துள்ளார்.
பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தொழிற்கல்வி வகுப்பில் தொழிற்கல்வி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த பொழுது ஆசிரியர் சக்திவேல் நெஞ்சு வலியால் மாரடைப்பு காரணமாக நெஞ்சை பிடித்துக் கொண்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பள்ளியில் இருந்த மாணவர்கள் உடனடியாக அருகில் இருந்த ஆசிரியரிடம் தகவல் அளித்த 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது ஆசிரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.
இன்னும் 7 வருடம் பணி இருந்த நிலையில் திடீரென்று பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது வகுப்பறையிலேயே உயிர் பிரிந்த நிலையில் பள்ளி மாணவர்கள் மட்டும் ஆசிரியர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பள்ளி ஆசிரியர் உயிரிழப்பை தொடர்ந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இறந்த ஆசிரியருக்கு மௌன அஞ்சலி செலுத்தி பிற்பகல் விடுமுறை அளிக்கப்பட்டது.
இறந்த ஆசிரியர் சக்திவேல் இதே பள்ளியில் தொழிற்கல்வி படிப்பு முடித்து 1994ஆம் ஆண்டு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக அதே பள்ளியில் அதே வகுப்பு ஆசிரியராக சேர்ந்து கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் நிரந்தர ஆசிரியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments