Breaking News

மங்கபதி சமேத தீப்பாய்ந்த மங்கம்மாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரத்தில் மங்கபதி சமேத தீப்பாய்ந்த மங்கம்மாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.  காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றம் கீழ்கதிர்பூர் இடையே வேகவதி நதிக்கரையில் அமைந்துள்ள மங்கபதி சமேத தீப்பாஞ்ச மங்கம்மாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது 


இதில் சிறப்பு யாகசாலை பூஜைகள் பாலாஜி சர்மா தலைமையில் நடைபெற்றது 



கடன் செயலி (LOAN APP) மோசடி 


இதனைத் தொடர்ந்து பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனைகளும்  பக்தர்களாலா சங்கல்பம் செய்து கலச புறப்பாடு நடைபெற்றது இதனைத் தொடர்ந்து மூலவர் விமானம் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக நடைபெற்று பக்தர்களுக்கு புனித நீர்த்தெளிக்கப்பட்டது 

இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானங்களும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சென்னையை சேர்ந்த மங்கம்மாள் பக்த ஜன சபா  சேர்ந்தவர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

No comments

Thank you for your comments