அனைத்திந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு (AICCC) சார்பில் அமைதி ஜெப நடை பேரணி
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து திருச்சபைகளும் மற்றும் அனைத்திந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு (AICCC) சார்பில் மணிப்பூர் மாநிலத்தின் சமாதானத்திற்காகவும்,பாதுகாப்புக்காகவும் காஞ்சிபுரத்தில் அமைதி ஜெப நடை பேரணி AICCC-ன் சேர்மனும், தலைவருமான பிஷப் டாக்டர்.B.மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலக வளாக்த்திலிருந்து துவங்கிய இப்பேரணியில் காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து போதகர்கள் ஐக்கிய தலைவர்கள், பேராயர்கள்,ஆயர்கள்,
திருச்சபை போதகர்கள் மற்றும் கிருஸ்துவ மக்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது கைகளில் SAVE MANIPUR CHRUCHES & CHRISTIANS என்ற பதாகைகளை ஏந்திக்கொண்டும், AICCC-ன் கொடிகளை ஏந்திக்கொண்டு வள்ளல் பச்சையப்பன் தெரு, மேட்டுத் தெரு,காவலான் கேட் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடை பேரணியாக சென்று இந்த அமைதி ஜெப நடை பேரணியானது முடிவுற்றது.
இந்த அமைதி ஜெப நடை பேரணியை ஒட்டி காஞ்சிபுரம் காவல்துறை சார்பில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
No comments
Thank you for your comments