உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மழலையர் நடை பேரணி
உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிராண்ட் மற்றும் கிடல் காசில்ஸ் பள்ளியில் இணைந்து மழலையர் நடை பேரணி நடத்தப்பட்டது.
இதில் 60-க்கும் மேற்பட்ட மழலையர்களும், 100க்கும் மேற்பட்ட ஆடவர்களும், 25 இருக்கும் மேற்பட்ட ரோட்டரி நண்பர்களும் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியை நமது மாவட்ட ஆளுநர் Rtn.P. பரணிதரன் அவர்களும் மற்றும் மாவட்ட இணை கண்காணிப்பாளர் Mr. சுரேஷ் அவர்களும், மாவட்ட பப்ளிக் இமேஜ் சேர்மன் Rtn.G. முருகேஷ் அவர்களும் மழலைப் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்
இப்பேரணி கிடல் காசில்ஸ் பள்ளியில் ஆரம்பித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது, அங்கு இயற்கை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டு, அனைவரும் உறுதிமொழி கையொப்பமிட்டனர்
மேலும் சிறப்பாக அம் மழலைகளின் கைரேகையின் மூலம் ஆன வண்ண மரத்தின் படத்தை இணை கண்காணிப்பாளர் இடம் அம்மழைகளின் கையால் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிராண்டின் தலைவர் Rtn.AR. சிவசிதம்பரம், செயலாளர் Rtn. சங்கர், பொருளாளர் Rtn.K. சம்பத் ஆகியோர் சிறப்பாக செய்தனர்.
No comments
Thank you for your comments