அதிக ஒலியெழுப்பும் மற்றும் அதிகபாரம் ஏற்றிய 22 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு...
அதிக ஒலியெழுப்பும் மற்றும் அதிகபாரம் ஏற்றிய 22 வாகனங்களுக்கு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி நடவடிக்கையாக ரூபாய் 2,91,000/- அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் மற்றும் சென்னை தெற்கு சரக இணை ஆணையர் முத்து ஆகியோர்களின் உத்தரவின் படி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் தலைமையில் மோட்டர் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் காஞ்சிபுரம் அம்பி, பொன்னேரி கரை மற்றும் வெள்ளை கேட் ஆகிய இடங்களில் தணிக்கை செய்து அவ்வழியே வந்த மூன்று அதிகபாரம் ஏற்றிய வாகனங்கள், பத்தொன்பது அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் மற்றும் தார்பாலின் போர்த்தபடாத வாகனங்கள் என மொத்தம் இருபத்தி இரண்டு வாகனங்களுக்கு ரூபாய் 2,91,000/- அபராதம் விதித்தும், அதிக ஒலி எழுப்பும் பைப் பாகங்களை அந்தந்த வாகன ஓட்டுநர்களை வைத்து கழற்றி கைப்பற்றப்பட்டு எச்சரிக்கை செய்து அனுப்பினார்.
மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் கூறுகையில், ஒலி மாசு அதிகமாக இருந்தால் மோட்டார் வாகன புதிய சட்டப்படி [மோட்டார் வாகன சட்டப் பிரிவு 190(2)] ரூபாய் 10,000 மற்றும் தடை செய்யப்பட்ட பகுதியில் ஒலி எழுப்பினால் [மோட்டார் வாகன சட்டப் பிரிவு 194F] ரூபாய் 1000 அபராதமும் விதிக்கப்படும் என்றும், ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்திய வாகனங்கள் 80 டெசிபலுக்கு மேல் ஒலிமாசு இருக்கும்போது அது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் மிகுந்த சிரமத்திற்க்கும், விபத்துக்கள் ஏற்பட காரணமாகவும் அமைகிறது.
எனவே ஒவ்வொரு ஓட்டுனரும் தம் கடமையை உணர்ந்து அதிக ஒலி எழுப்பும் அல்லது கூடுதல் ஹாரன்கள் பொருத்தாமலும், அதிகபாரம் ஏற்றாமலும் வாகனத்தை இயக்கி காஞ்சிபுரம் பகுதியில் விபத்தை தடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
No comments
Thank you for your comments