தமிழக எல்லை வரைபடத்துக்குள் காமராஜரின் நிகழ்வுகளை ஓவியமாக வரைந்து அசத்திய காஞ்சிபுரம் ஓவியர்
தமிழக எல்லை வரைபடத்துக்குள் காமராஜரின் 30க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை அவரது 121 வது பிறந்த நாளையொட்டி ஓவியமாக வரைந்து அசத்தினார் காஞ்சிபுரம் ஓவியர்.
சின்ன காஞ்சிபுரம் அண்ணா அவின்யு பகுதியை சேர்ந்தவர் ஓவியர் சங்கர். இவர் மினியேச்சர் எனக் கூறப்படும் குறைந்த நீள , அகலம் கொண்ட அளவுகளில் பல அசாத்திய ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தியும் பல்வேறு பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ஓவியக் கலையை கற்றும் தருகிறார்.
இந்நிலையில் முன்னாள் தமிழக முதலமைச்சரும், கல்வி தந்தை என கூறப்படும் கர்ம வீரர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா ஜூலை 15 சிறப்பாக கொண்டாடப்படுகிறது
இந்நிலையில் ஓவியர் சங்கர் கர்மவீரர் காமராஜரின் இளமைக்காலம் முதல் இறுதி காலம் வரை அவருடைய வரலாற்று நிகழ்வுகளான கல்வி, அரசியல் மற்றும் நலத்திட்டம் உள்ளிட்டவைகளை தமிழக வரைபட எல்லைக்குள் அழகாக ஓவியங்களாக வரைந்து பார்ப்போரை அசத்தும் வண்ணம் உள்ளது.
குறிப்பாக அவரது அமைச்சரவையில் இடம் பெற்ற உறுப்பினர்களுடா புகைப்படம் , மதிய உணவு திட்டம், அணைகள், எலிசபெத் ராணி, அன்னை இந்திரா காந்தி உடன் சந்திப்பு என அனைத்தும் இடம் பெற்றுள்ளது.
No comments
Thank you for your comments