Breaking News

போதையில் நண்பரை கொலை செய்த கிணற்றில் வீசிய சக நண்பர்கள்.. பரபரப்பு வாக்குமூலம்

காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த கிரிதரன் 6 மாதங்களுக்கு முன் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் கொலை செய்து கிணற்றில் வீசியதாக சக நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.


காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் கிரி(எ)கிருபாகரன் (29). இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட 6வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி புதுப்பாளையம் பகுதியில் ஒரு பாழடைந்த வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றின் அருகே மது அருந்திக் கொண்டிருந்தனராம்.

கொலை செய்யப்பட்ட கிரி(எ)கிருபாகரன்

அப்போது யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டத்தில் நண்பர்கள் கிரிதரனை தாக்கி கொலையும் செய்து விட்டு கயிற்றால் கட்டி அருகிலுள்ள  கிணற்றில் கல்லை கட்டி இறக்கிவிட்டு போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

மேலும் அடுத்தடுத்த சில நாட்களில் கிரிதரன் சடலம் மேலே வராத வண்ணம் அங்குள்ள மரங்களையும் வெட்டி கிணற்றினுள் போட்டுள்ளனர்.

கடன் செயலி (LOAN APP) மோசடி 

இந்த நிலையில் தனது தம்பி கிரிதரனை காணவில்லையென அவரது அக்கா கிரிஜா சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் செய்துள்ளார்.

இந்நிலையில் கிரிதரனுடன் மது அருந்திய நண்பர்கள் சிலர் கஞ்சா மற்றும் குடிபோதையில் கிரிதரனை தாக்கி கயிற்றால் கட்டி கிணற்றில் வீசியிருப்பதாக சிலரிடம் தெரிவித்துள்ளனர்.

இதை அறிந்த சிவகாஞ்சி காவல் நிலையத்தினர் அக்கிணற்றில் தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த்துறையினரின் உதவியுடன் தேடிய போது மண்டைஓடு  எலும்புக்கள் மட்டுமே கிடைத்தன.

இந்தியாவிலேயே முதன்முறையாக TEALS திட்டம் 
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இது தொடர்பாக காவல்துறையினர் அதே பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த கிரிதரனின் நண்பர்களான தாமோதரன்(19), ஆகாஷ்(18), கார்த்தி(18), ஹரிஷ்(20), கிளி(எ)ரவிசங்கர் ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் மேலும் சிலரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதையில் உடன் பழகிய நண்பரை சக நண்பர்களே கொலை செய்துள்ள சம்பவமும் காணமால் போனதாக எண்ணப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments