Breaking News

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு மணி நேரத்தில் பயனாளிகளுக்கு லைசன்ஸ்

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்  பயனாளிகளுக்கு  இன்று (17.07.23) ஒரு மணி நேரத்தில் லைசன்ஸ் வழங்கப்பட்டன. 



காஞ்சிபுரம் மாவட்டம்  தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் திரு சண்முகசுந்தரம் இ.ஆ.ப அவர்களின் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதிய ஓட்டுனர் உரிமம், ஓட்டுநர் நடத்துனர் உரிம புதுப்பித்தல் மற்றும் ஏனைய பணிகளுக்காக வரும் பயனாளிகளுக்கு  தத்தம் பணி முடித்த பின் ஒரு மணி நேரத்தில் லைசென்ஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

கடன் செயலி (LOAN APP) மோசடி 

இதனை தொடர்ந்து சென்னை தெற்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் திரு.ஏ.ஏ.முத்து மற்றும் காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தினகரன் அறிவுறுத்தலன்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அவரவர்களுடைய பணி முடித்தவுடண்  பெரிய திரைகள் மூலம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வை சுமார் ஒரு மணி நேரம் எடுத்து உடனடியாக அவர்களுடைய அசல் உரிமம் வழங்கப்பட்டது.

இன்று பல்வேறு பணிகளுக்காக வருகை புரிந்த ஆண்கள் பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர்களுக்குவட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் இந்நிகழ்ச்சியில் தலைக்கவசம் குறித்த விரிவான தகவல்களையும், ஹெல்மெட் அணியாமல் சென்றால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பு போன்றவை தெளிவாக  ஒலி ஒளி காட்சி மூலம் விளக்கப்பட்டது. 

மேலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் காரில் பயணிக்கும் போது போக்குவரத்து விதிகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்றும் அவற்றால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து சாலையில் செல்வோர் இருபுறமும் பார்த்து போக்குவரத்து விதிகளை பின்பற்றி செல்ல வேண்டும் என கூறினாலும் எதிர்மறையான பயணத்தின் போது வலது பக்கம் சென்றால் பின்பக்கம் வரும் வாகனங்கள் கவனக்குறைவால் விபத்து ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதையும் எடுத்துக் கூறி அச்சமயங்களில் வலது பக்கமும் செல்லலாம் என்ற விதியிணையும் வாகன உரிமம் பெற வந்த பயனாளிகளுக்கு தெள்ளத் தெளிவாக பட விளக்கம் அளித்தனர்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக நேர்முக உதவியாளர் செல்வம்,  கண்காணிப்பாளர் கோபி மற்றும் உதவியாளர் டோமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments