காஞ்சிபுரம் தாய் படவேட்டம்மன் ஆலயத்தில் 46 ஆம் ஆண்டு ஆடி உற்சவம்
காஞ்சிபுரம் தாய் படவேட்டம்மன் ஆலயத்தில் 46 ஆம் ஆண்டு ஆடி உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள அம்மன் ஆர்ச் தாய் படவேட்டம்மன் ஆலயத்தில் 46 ஆம் ஆண்டு ஆடி உற்சவம் விமர்சையாக நடைபெற்றது
இதில் காலை சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்ற கும்படையிட்டு தீபாரதனைகள் மற்றும் கூழ்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அம்மன் சகலவாத்தியத்துடன் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம். காவலன் கேட். மேட்டு தெரு. வள்ளல் பச்சையப்பன் தெரு .நடுத்தெரு உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்
இதில் வழியங்கும் பக்தர்கள் அம்பாளுக்கு பட்டுப்புடவைகள் மலர் மாலைகள் அணிவித்து அம்பாளின் அருளை பெற்று சென்றனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்த கலைநன்மணி எம்.ஜி வடிவேல் மற்றும் டாக்டர் கிருஷ்ணா பிரதர்ஸ் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்
No comments
Thank you for your comments