Breaking News

ஆகஸ்டு 20ல் அதிமுக சார்பில் மதுரையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு

அதிமுக சார்பில் ஆகஸ்டு 20ம் தேதி மதுரையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் ஆட்டோக்களுக்கு விளம்பர பதாகைகள் ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றன.




காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் சன்னதி தெரு பகுதியில் மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வி ஆர் மணிவண்ணன் ஏற்பாட்டில் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும். 

கடன் செயலி (LOAN APP) மோசடி 

அதிமுகவின் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு அதிமுக பொது செயலாளர் முன்னாள் முதல்வர் இந்நாள் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான விளம்பர பதாகைகள் காஞ்சிபுரம் மாநகராட்சியில் இயங்கும் ஆட்டோக்கள் பின்பு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் தலைமையில் பதாகைகள் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் 16 கால் மண்டபத்தில் வீற்றிருக்கும் வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாபெரும் எழுச்சி மாநாடு சிறப்புற நடைபெற ஸ்ரீ வீர ஆஞ்சநேயரை வேண்டி தேங்காய் உடைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மற்றும் மாவட்ட மாநகர நிர்வாகிகள் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments