திருமங்கலம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடத்த கோரிக்கை
காஞ்சிபுரம், ஜூலை 18:
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட சுங்குவார்சத்திரம் அருகேயுள்ளது திருமங்கலம் ஊராட்சி. பட்டியலின வகுப்பைச் சேர்ந்த த.அன்பு(55) இதன் ஊராட்சி மன்றற தலைவராக இருந்து வந்தார். இவர் கடந்த 2021-ல் நடைபெற்றற தேர்தலில் ஊராட்சித் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
கத்திரிக்காய் கிரேவி
Brinjal curry recipe - Easy And Fast Cooking
இந்நிலையில் கடந்த 16.1.2023-ஆம் தேதி உடல்நலக்குறைறவால் காலமானார். அதன் பின்னர் துணைத் தலைவராக இருந்து வரும் ரேகா நரேஷ்குமாரே தலைவர் பதவியில் இருந்து வருகிறறார்.
கடந்த 6 மாத காலமாக ஊராட்சித் தலைவர் பதவி காலியாக இருப்பதால் உடனடியாக தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த வேண்டும். அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம், திருமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த அ.சூரியபிரகாஷ் , கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
No comments
Thank you for your comments