குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது - ஓராண்டு தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு
காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜேஷ்குமார் (எ) ராஜா (எ) அப்பள ராஜா(39) த/பெ.மகாலிங்கம், கலைஞர் தெரு, ஜெய்ஹிந்த்புரம், மாடகுளம் கிராமம், திருப்பரங்குன்றம் தாலுக்கா, மதுரை மாவட்டம் என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.M.கலைச்செல்வி மோகன், அவர்கள் மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க இன்று(18.07.2023) உத்தரவு பிறப்பித்தார்.
No comments
Thank you for your comments