ஊரக உள்ளாட்சி சுகாதார பொது பணியாளர்கள் சங்கம் ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி சுகாதார பொது பணியாளர்கள் சங்கம் ஏஐடியுசி சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் வேலையை, ஊதியத்தை, வாழ்க்கையை பறிக்கும் ஒப்பந்த முறையை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
காஞ்சிபுரம் மாநகராட்சி காந்தி சாலையில் அமைந்துள்ள பெரியார் துணை அருகே காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி சுகாதார பொது பணியாளர்கள் சங்கம் ஏஐடியுசி சார்பில் சங்கத் தலைவர் சம்பத் தலைமையில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் பெரும்பாலானோர் ஒப்பந்த அடிப்படை முறையிலேயே பணியாற்றி வருகின்றனர் இவற்றால் தூய்மை பணியாளர்கள் தங்களது வேலையை ஊதியத்தை வாழ்க்கையை பறிக்கும் ஒப்பந்த முறையை கைவிடக்கோரி ஏஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
மேலும் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்தும் அரசு நிர்ணயத்தை குறைந்தபட்ச ஊதியத்தினை நாளொன்றுக்கு வழங்கிடவும் மாதந்தோறும் முதல் தேதி ஊதியம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியை அமுல்படுத்தி தூய்மை பணியாளர்களுக்கு பிஏபிஎஸ்ஐ முறையாக வழங்க வேண்டும் என்றும் குறைந்தபட்ச ஊதியத்தை குறைப்பதற்காக வெளியிடப்பட்ட அரசாணியை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறியும் வேலைப்பளு இரண்டு மடங்கு அதிகரிப்பதை குறைத்திடவும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
இந்த ஆர்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி சுகாதாரப் பொது பணியாளர்கள் சங்க ஏ.மூர்த்தி சிறப்புரையாற்றினார்
உறுப்பினர்கள் ராஜா, மகேஸ்வரி, சங்கப்பன், வெங்கடேசன், மணிகண்டன், மாரியம்மாள் மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments