Breaking News

IFS நிதி நிறுவன கிளை இயக்குநர் ஆனந்த செல்வராஜ் உறவினர் வீடு முற்றுகை



பொது மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி சுமார் 6 ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட, ஐ.எப்.எஸ் நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக 19பேர் மீது வழக்குப்பதிவு சைய்து இதுவரை 6பேரை பொருளாதார குற்றபிரிவு போலீசார் கைது செய்திருக்கின்றனர்.இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், ஒரு கோடியே 46 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள், 16 கார்கள், 46 அசையா சொத்துக்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதலும் செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட வந்தவாசி வாழைபந்தல் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த செல்வராஜ்.இவர் காஞ்சிபுரம் குருவிமலை அடுத்துள்ள வளத்தோட்டம் பகுதியிலுள்ள தனது அக்கா ராதாம்மாள் என்பவரது வீட்டில் தனது சிறுவயது முதலே வசித்துவந்துள்ள அவர் தொழிற்சாலைகள் நிறைந்த ஓரகடம் பகுதியில் IFS நிதி நிறுவன கிளை அலுவலகத்தை நடத்திவந்துள்ளார்.

கடன் செயலி (LOAN APP) மோசடி 

இதனால் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த பலர் ஆனந்த் செல்வராஜ் நடத்தக்கூடிய இக்கிளை அலுவலகத்தில் பணம் செலுத்திவந்துள்ளனர்.அதே போல் இவரது அக்கா அமைந்துள்ள வளத்தோட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள களக்காட்டூர்,ஓரிக்கை,தூசி போன்ற சுற்றுவட்டார கிராம பகுதிகளை சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் இவரது பணம் கட்டியிருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருட காலமாக ஆனந்த் செல்வராஜ் தலைமறைவாக இருந்துவருவதாக கூறப்படும் நிலையில் தங்களது பணம் குறித்த அவரது அக்கா ராதாம்மாளிடம் தொடர்ந்து கேட்டுவந்த இன்று அவரது அக்கா வீட்டிற்கு சென்ற பாதிக்கப்பட்டவர்கள் 50-க்கும் பணம் குறித்து கேட்க என்னிடம் கேட்காதீர்கள் என பதலளித்த நிலையில் கொந்தளித்த பாதிக்கப்பட்டவர்கள் அந்த வீட்டின் முன்பு இருந்த சிசிடிவி கேமரா மற்றும் இருசக்கர வாகனத்தினை அடித்து உடைத்திருக்கின்றனர்.

இந்தியாவிலேயே முதன்முறையாக TEALS திட்டம் 
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பின்னர் அந்த வீட்டினை முற்றுகையிட்ட நிலையில் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சென்னை பொருதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்த கூறியதன் பெயரில் முற்றுகை போராட்டத்தினை கைவிட்டு களைந்து சென்றனர்.

தீடிரென IFS நிதி நிறுவன இயக்குநர் வீட்டினை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

ஐஎப்எஸ் கிளை இயக்குநராக செயல்பட்டு வந்த ஆனந்த் செல்வராஜ் ஒரகடம் சுற்றுயுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் வளத்தோட்டம் சுற்றியுள்ளவர்கள் என சுமார் 5000-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் 200கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் தற்போது தனது பினாமி பெயரில் வைத்திருக்கும் சொத்துக்கள் விற்று வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments

Thank you for your comments