Breaking News

ரூ. 222.50 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளின் பல்வேறு இடங்களில் ரூ. 222.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள  மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நல்லாட்சியுடன், காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ள  பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று (24.07.2023) மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021 - 2022 கீழ் ரூ. 45.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாருதி என்கிளேவ் பூங்காவினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022 - 2023 கீழ் ரூ. 27.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஏ.ஆர் நகரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பூங்காவினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022 – 2023 கீழ், ரூ. 26.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிட்டி பேஸ் பூங்கா அமைத்தல் பணியினையும் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்கள்.

பின்பு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022 – 2023 கீழ், ரூ. 16.00 லட்சம் மதிப்பீட்டில் திருக்குளம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள குளம் மேம்பாட்டு பணியினையும்,  கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் 2021 - 2022 கீழ் ரூ. 48.50 லட்சம் மதிப்பீட்டில் வன்னியர் பட்டு பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள குளம் மேம்பாட்டு பணியினையும் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்கள்.

அதனை தொடர்ந்து, கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நபார்டு வங்கி RIDF-XXV திட்டத்தின் கீழ், ரூ.40.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடத்தையும், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 19.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியையும் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்கள்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, மாங்காடு நகர மன்ற தலைவர் திருமதி. சுமதிமுருகன்,  மாங்காடு நகர மன்ற துணைத் தலைவர் திரு.பட்டூர். எஸ். ஜபருல்லா, மாங்காடு நகராட்சி ஆணையர் திருமதி. இராசுமா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments