பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய பாஜக அரசு முனைப்பு - வலுக்கும் எதிர்ப்பு
அதை வரும் பாராளுமன்றத்தில் மதசார்பற்ற அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்க்க வேண்டி மாண்புமிகு குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோரை காஞ்சிபுரம் மாவட்ட மஸ்ஜித் & மதரஸா மற்றும் அனைத்து முஹல்லாஹ் ஜமாத் கூட்டமைப்பு சார்பாக நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தார்கள்.
இந்நிகழ்வில் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஜாஃபர், கூட்டமைப்பின் செயலாளர் ஜாபர் ஷெரிப், கூட்டமைப்பின் கௌரவத் தலைவர்கள் சையத் சிலார், அப்துல் சுக்கூர், லியாகத் அலி, கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் காஜா, சுன்னத் ஜமாத் பள்ளிவாசலின் தலைமை இமாம் மௌலானா மௌலவி காலித் காஷிபி, கூட்டமைப்பின் உறுப்பினர்களான ஹாஜி முபாரக் அலி,சையத் இஸ்மாயில்,பைரோஸ் மற்றும் ஜமாத்தார்கள் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments