சிஎஸ்ஐ கிருஸ்துநாதர் ஆலயத்தில் நற்செய்தி பெருவிழா
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள சிஎஸ்ஐ கிருஷ்ணா நகர் ஆலயத்தில் நேற்று நற்செய்தி பெருவிழா ஆயர் தேவ இரக்கம் தலைமையில் நடைபெற்றது
இதில் காலை உலக மக்கள் நன்மை கருதியும்.ஆரோக்கிய வாழ்வு பெறவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.இதனை தொடர்ந்து விழாவில் சிறப்பு தரும் வகையில் ஆலயத்தில் ஊழியம் செய்பபவர்களால் தயார் செய்யப்பட்ட அனைத்து உணவு வகை உணவு கண்காட்சிகள் நடைபெற்றது.
இதில் செயலாளர் சைலஸ் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் விழாவில் ஏற்பாடுகளை நிறுவனத் தலைவர். நற்செய்தி பணியாளர்கள். ஐக்கிய சங்கங்கள் .மற்றும் சபை மக்கள் இணைந்து சிறப்பாக செய்கின்றனர்.
இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மாணவ மாணவிகளின் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பொருளாளர் ஷீபாசுகிர்தவதி நன்றிகளை தெரிவித்தார்
No comments
Thank you for your comments