Breaking News

ஊராட்சி நிதிகளில் முறைகேடு... ஊராட்சி மன்ற தலைவர், து.தலைவர் மீது நடவடிக்கை எடுத்திட ஆட்சியரிடம் மனு

காஞ்சிபுரம் 10-07-23.


காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர்  ஒன்றியத்திற்க்கு உட்பட்ட வைப்பூர் ஊராட்சியில் பெண் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சுமதி ராமசந்திரனும், துணை தலைவராக பாரதி ராஜா என்பவரும் உள்ளனர்.



கடன் செயலி (LOAN APP) மோசடி 

இந்நிலையில் வைப்பூர் ஊராட்சியில் கடந்த ஒன்றரை வருடங்களாக ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் செலவிடப்பட்ட ஊராட்சி நிதிகளில் பல முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும்,ஊராட்சியின் வரவு செலவு கணக்கினை ஆய்வு செய்து, ஊராட்சி மன்ற தலைவர் ,துணை தலைவர் ஆகியோர் மீது உரிய விசாரணை செய்த நடவடிக்கை எடுத்திட வேண்டியும், அதேபோல் ஊராட்சி மன்ற தலைவராக செயல்படும் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமச்சந்திரனின் மைத்துனர் சந்தானத்திற்கு ஆதரவாக செயல்படும் துணைத் தலைவர் பாரதி ராஜா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வைப்பூர் ஊராட்சியிலுள்ள ஆறு வார்டுகளில் 3,4,5,6 ஆகிய நான்கு வார்டுகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 


மேலும் வார்டு உறுப்பினர்களை ராஜினாமா செய்திட வேண்டும் எனவும் ஊராட்சி மன்ற தலைவரின் மைத்துனர் சந்தானம் தங்களை மிரட்டுவதாகவும் வார்டு உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்றைய தினம் கூட நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை நேரில் சந்தித்து இது சம்பந்தமாக மீண்டும் வைப்பூர் ஊராட்சியைச் சேர்ந்த 3,4,5 மற்றும் 6வது வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து வைப்பூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

வைப்பூர் ஊராட்சியில் கடந்த ஒன்றரை வருடமாக குடிநீர் வசதி, சாலை வசதி,தெரு விளக்கு வசதி உள்ளிட்ட பல வசதிகளை செய்ததாக சுமார் 4கோடி ரூபாய் வரை ஊராட்சி நிதி செலவழிக்கப்பட்டுள்ளது, அதில் பல முறைகேடுகள் நடந்திருக்கிறது. 

ஒன்றரை வருடமாக நாங்கள் எவ்வித தீர்மானங்களிலும் கையெழுத்திடவில்லை என ஊராட்சி மன்ற தலைவரே கூறுகிறார், அவ்வாறு இருப்பின் ஊராட்சி நிதிகளில் பல முறைகேடுகள் நடந்திருக்கிறது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

அது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்... ஊராட்சி மன்ற தலைவராக, ஊராட்சி மன்ற தலைவரின் மைத்துனர் சந்தானம் என்பவர் தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். 

அது குறித்து தக்க ஆதாரங்களுடன் தான் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.. எங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் நீங்கள் எந்த பணிகளிலும் ஈடுபடவில்லை,அப்படி இருக்கையில்லை எதற்க்காக நீங்கள் வார்டு உறுப்பினர்களாக உள்ளீர்கள் என எங்களை பொது மக்கள் சரமாரியாக கேள்வி கேட்கின்றனர்.அவர்களுக்கு எங்களால் பதில் கூற முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ஊராட்சியில் செலவிடபட்ட நிதிகள் குறித்த விவரங்களை கேட்டால் கூட ஊராட்சி செயலர் அத்தகவல்களை தர மறுக்கிறார்.

மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தான் ஊராட்சி மன்ற கூட்டத்தில் அதிகாரம் படைத்து செயல்பட வேண்டும் ஆனால் அதற்கு மாறாக ஊராட்சி மன்ற கூட்டங்களில் சந்தானம் என்பவர் தான் எல்லா அதிகாரிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் போல் முறைகேடாக செயல்படுகிறார், தீர்மானங்களில் கையெழுத்திட வேண்டும் என வார்டு உறுப்பினர்களை சந்தானம் என்பவர் மிரட்டுகிறார்,அதற்கும் நடவடிக்கை எடுத்திட வேண்டும், வார்டு மன்ற ஒப்புதல் பெற்றப்பின் தான் ஊராட்சி மன்ற கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும், வார்டுகளில் நடைபெறுகின்ற வேலைகள் குறித்து வார்டு உறுப்பினர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வைப்பூரை சார்ந்த வார்டு உறுப்பினர்கள் இதுக்குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

No comments

Thank you for your comments