Breaking News

பரந்தூர் விமான நிலையம் அமைக்க கள ஆய்வு செய்ய வந்த குழுவை தடுக்க தடையை மீறி ஊர்வலமாக சென்ற கிராம மக்கள் கைது

பரந்தூர் விமான நிலையம் அமைக்க கள ஆய்வு செய்ய வந்த அரசு தரப்பு ஆய்வு குழுவை தடுத்து நிறுத்த  தடையை மீறி ஊர்வலமாக ஏகனாபுரம் கிராம மக்கள்.

தடையை மீறி ஊர்வலமாக சென்ற 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  போலீஸார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் உள்ள சுற்று வட்டார 13 கிராம பகுதிகளை ஒன்றிணைந்து 4791 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.


பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள்  346 வது நாளாக  பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.



கடன் செயலி (LOAN APP) மோசடி 
டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

கிராம சபை கூட்டங்களில் 6 முறை விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.

இந்நிலையில் தமிழ் நாடு  அரசு தரப்பில் பேராசிரியர் மச்சநாதன் தலைமையில் ஐஐடி குழுவினர் கள ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

அதன்படி பரந்தூர் விமான நிலையம் அமைக்க  உள்ள இடத்தில் கள ஆய்வுக்கு வருகை தரும் போராசிரியர் மச்சநாதன் ஆய்வு குழுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதபோராட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே ஆய்வு குழுவினர் ஆய்வு செய்வதை அறிந்து கிராம மக்கள் ஆவேசமடைந்து ஆய்வு குழு உணவை தடுத்து நிறுத்த ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

பரந்தூர் மதுர மங்கலம் சாலையில் ஊர்வலமாக சென்ற கிராம மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனிடையே ஊர்வலமாக சென்று கிராம மக்களுக்கும் போலீசருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசாரின் தடையை மீறி ஊர்வலமாக சென்று 300 கிராம மக்களை போலீசார் கைது செய்து, பேருந்தில் ஏற்றி வல்லக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில்  அடைத்தனர்.

ஏகனாபுரம் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஒட்டி வழிநெடுக்கிலும் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

ஏகனாபுரம் கிராம மக்கள் கைது செய்யப்பட்ட தகவல் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Thank you for your comments