Breaking News

டாஸ்மாக் கடைகளில் தொடரும் குவாட்டருக்கு பத்து ரூபாய் அவல நிலை

ஆவடி :

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் குவாட்டருக்கு பத்து ரூபாய் மேலே வைத்து கேட்டதால் மது பிரியர்களுக்குள் சண்டை கச்சறிவுகள் அரங்கேறுகிறது. 


இந்த மதுபான கடையில்  சரிவர சரக்கு இல்லாததால் இவர்கள் முதல் குவாட்டர் ரூபாயை 180 க்கு மேல் தான் என்று தெரிவித்து வருவதால் குடிமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர் 



கடன் செயலி (LOAN APP) மோசடி 
டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

அதுமட்டுமில்லாமல் அரசு நிர்ணயத்த விலையை விட பத்து ரூபாய் அதிகமாக வைத்து விற்பதால் மது பிரியர்கள் என்ன செய்து என்று தெரியாமல் குடிமகன்கள் புலம்பி வருகின்றனர் 

இந்தப் பத்து ரூபாய் மதுபிரியர்களிடம் வாங்குவது வாடிக்கையாகிவிட்டது. இதை யாரும் தடுக்க முடியாது என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர் 


இந்த பத்து ரூபாயில் அமைச்சர் மட்டும் அல்லாமல் காவல் நிலைய ஆய்வாளர், போக்குவரத்து ஆய்வாளர்,   கலால் துறை ஆய்வாளர் ஆகியோர்களுக்கும் நான் கப்பம் கட்ட வேண்டும்.

அப்படி கட்டினால் மட்டுமே இங்கு நடக்கும் சண்டைகளுக்கு அவர்கள் உடனே நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.  இல்லையென்றால் தினம் தினம் சண்டை சச்சரவுகள் அதிகமாக உள்ளது நாங்கள் என்ன செய்வது என்று புலம்பி வருகின்றனர்.

இந்த பத்து ரூபாய்க்கு விடிவு காலம் வராதா என்றும் மது பிரியர்கள் புலம்பி செல்கின்றனர். டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்பு துறை ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என்று மது பிரியர்கள் புலம்பி விட்டு செல்கின்றனர். 

இந்த குடிமகன்களின் புலம்பல்களுக்கு அரசு செவி சாய்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

No comments

Thank you for your comments