அரசு போக்குவரத்து கழகம் மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து கழகம் மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே பொன்னேரி கரை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் மண்டல அலுவலகத்தில் பிடித்தம் மற்றும் தீர்வு, தொழிலாளர் நலன் பிரிவில் கண்காணிப்பாளராக சென்னை திருவேற்காடு நூம்பல் சூசை நகர் பகுதியைச் சேர்ந்த மணி வயது 59 என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
கண்காணிப்பாளர் மணி வழக்கம் போல் இன்று சீக்கிரம் பணிக்கு வந்த நிலையில் திடீரென அறையின் கதவை தாழ்த்திக் கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் அலுவலகத்திற்கு வந்த பணியாளர்கள் இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் மணியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கண்காணிப்பாளர் மணி தற்கொலை செய்து கொள்ள காரணம், குடும்ப பிரச்சனையா, அல்லது பணிசுமையா என்ற கோணத்தில் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு அலுவலகத்தில் கண்காணிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments