கல்லூரியில் பகல் கொள்ளை..! - அடிப்படை வசதியின்றி அவதியுறும் மாணவிகள்... கண்டு கொள்ளுமா தமிழக அரசு
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்து பருத்திப்பட்டில் மகாலட்சுமி தனியார் கல்லூரி இயங்கி வருகிறது.
இந்த கல்லூரியில் மின்விசிறிகள் சரியாக இயங்கப்படாத நிலையில் உள்ளதாகவும் கம்ப்யூட்டர்களும் சரிவர இயங்காத நிலையில் இருப்பதாகவும் பாத்ரூம் சரியாக சுத்தம் செய்யாமலும் சரியான குடிநீர் இல்லாமல் மாணவிகள் அவதிப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது
இது ஒரு புறம் இருந்தாலும் மகாலட்சுமி கல்லூரியில் படிக்கும் மாணவிகள் காலையில் எட்டு மணிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் 8.5 வந்தாலும் 50 ரூபாய் மாமூல் கொடுத்தால் மட்டுமே உள்ளே அனுமதிப்பதாக குற்றம் சாட்டில் வருகின்றனர்
அதுமட்டுமின்றி இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் முன்கூட்டியே செமஸ்டருக்கு உண்டான பணத்தை கட்டி விட வேண்டும். இவர்கள் தெரிவித்து 20 நாட்களுக்குள் பணத்தை செலுத்தி விட வேண்டும் செமஸ்டர் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே இந்த தொகையை கட்டிவிட வேண்டும்.
அப்படி கட்ட தவறினால் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். கல்லூரி மாணவிகள் இந்தக் கல்லூரியில் பிரின்சிபால் ஓரளவுக்கு சிறந்த முறையில் நடந்து கொள்கிறார். ஆனால் துணை பிரின்சிபால் அவர்கள் மரியாதை இல்லாமல் பேசி எங்கள் மனதை புண்படும் அளவுக்கு நடந்து கொள்கிறார் என்று மாணவிகளும் பெற்றோர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நாங்களும் களத்தில் இறங்கி சென்று பார்த்தோம் துணை பிரின்ஸ்பால் அவர்கள் மரியாதை இல்லாமல் பேசுவது தெரியவந்தது
யார் இவர் எந்த தைரியத்தில் பேசுகிறார் என்று பார்த்தால் திருவேற்காட்டில் பிரபு கஜேந்திரன் திமுகவில் பொறுப்பில் உள்ளதால் இவர் பினாமி பெயரில் இந்த கல்லூரி உள்ளதால் இவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று துணை பிரின்சிபல் அவர்களே தெரிவிக்கிறார்
இதனால் இந்த கல்லூரி மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஆய்வு மேற்கொள்ள அரசு ஒரு தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் புகார் பெட்டி ஒன்று அமைத்து அதனை அந்த ஆய்வுக்குழு வாரத்தில் ஒரு முறை திறந்து பார்க்க வேண்டும் எனவும் கல்லூரியில் உள்ள மாணவிகள் தெரிவித்து வருகின்றனர்
முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு கல்லூரியில் மாணவர்கள் சேரும்பொழுது பணம் கட்டினாலும் புத்தகம் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கின்றனர். பிறகு அவர்கள் எப்பொழுது கொடுக்கிறார்களோ அப்போதுதான் வாங்க வேண்டும் அதுவரை அவர்கள் அனுப்பும் பிடிஎப்-ல் படித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இதனால் மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கண் வலி, தலை வலி போன்றவற்றால் அவதியுறுகின்றனர்.
மாணவிகள் மற்றும் பெற்றோர்களின் புகார்களுக்கு அரசு நடவடிக்கை எடுக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்
No comments
Thank you for your comments