பாஜக 9 ஆண்டுகால ஆட்சியில் பெட்ரோல், சமையல் எரிவாயு விலை என்னாச்சு? - எம்எல்ஏ சுந்தர் கேள்வி
காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட மாநகர திமுக இரண்டாவது பகுதி கழகம் சார்பில் மாநகராட்சி பணிகள் குழு தலைவரும் மாவட்ட பிரதிநிதியும் மான் சுரேஷ் ஏற்பாட்டில் மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பகுதி வாரியாக பெண்களுக்கு தையல் இயந்திரம், சேலை நலத்திட்டமாக வழங்கினர். மேலும் அப்பகுதி இளைஞர்களுக்கு விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக கிரிக்கெட் பேட், பால், ஸ்டெம்ப்ட் என விளையாட்டு பொருட்களை வழங்கினர். இதனைத் தொடர்ந்து சலவை தொழிலாளி ஒருவருக்கு இஸ்திரி பெட்டியை நலத்திட்டமாக வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து திமுக தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் கா. சுந்தர் பேசுகையில் கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் 121வது பிறந்த நாள் முன்னிட்டு மதுரையில் தமிழக முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் அதேபோல் செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் முன்னிட்டு குடும்பத் தலைவிகளுக்கு மாத ஆயிரம் ரூபாய் திட்டத்தினை தொடங்க உள்ளதாகவும் காமராஜர் பிறந்த நாளில் கலைஞரின் நூற்றாண்டு நூலகமும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் மகளிருக்கான உரிமை தொகையும் வழங்குகின்ற இது போன்ற மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொள்ளும் அரசு திமுக அரசு என்றும் கூறினார்.
மேலும் தக்காளி, வெங்காயம், காய்கறி விலை ஏற்றம் மழைக்காலங்களில் போக்குவரத்து குறைவால் ஏற்படும் விலை ஏற்றமும் மீண்டும் போக்குவரத்து சரியான பிறகு சகஜ நிலை ஏற்பட்டு விலை இறக்கம் ஏற்பட்டு பழைய விலைக்கு விற்பனைக்கு வந்துவிடும் இவற்றால் காய்கறிகளின் விலை ஏற்றம் இறக்கம் இயற்கையில் நடப்பதுதான் ஆனால் பாஜக 9 ஆண்டுகால ஆட்சியில் ஆட்சிக்கு முன்பு பெட்ரோல் விலை, சமையல் எரிவாயு விலை எவ்வளவு என்றும் அப்போது எவ்வளவு விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது எவ்வளவு விலைக்கு கொடுத்தார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும் ஆனால் இந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பெட்ரோல் விலை சமையல் எரிவாயு விலை ஏறிக்கொண்டே சென்றது ஒழிய எப்படி எல்லாம் இன்றைய பிரதமர் மோடி அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் இதை நாட்டு மக்களும் நம் தாய்மார்களும் எண்ணிப் பார்க்க வேண்டும் என கூறினார்.
பின்பு பாஜக ஆட்சிக்கு வந்தால் இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு மட்டும் தெரிவித்து விட்டு இப்போது வருகின்ற நாடாளுமன்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு மோடி அவர்களுக்கு ஞாபகம் ஏற்பட்டு கடந்த ஆறு மாதத்தில் 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம்,மாநகர அவைத்தலைவர் செங்குட்டுவன், மாநகர துணை செயலாளர்கள் ஏ.எஸ்.முத்துசெல்வம், நிர்மலா, பகுதி செயலாளர்கள் சந்துரு,திலகர், வெங்கடேசன்,தசரதன், மாநகராட்சி மண்டலக் குழு தலைவர்கள் சாந்தி சஈன்வஆசன், சசிகலா, செவாலியே எஸ்.மோகன், மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments