தென்னிந்திய அளவிலான யோகாசன வாகையர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ஸ்ரீ நாராயண குரு யோகா மையம் காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட அமைச்சூர் யோகா சங்கம், இந்திய தேசிய யோக அமைப்பு மற்றும் அகில இந்திய யோகா விளையாட்டு அமைப்பு இணைந்து தென்னிந்திய அளவிலான யோகாசன வாகையர் போட்டி 2023 நடைபெற்றது.
இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு காஞ்சிபுரம் ரத்னா பாய் திருமண மண்டபத்தில் இன்று (16.07.2023) பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கடன் செயலி (LOAN APP) மோசடி
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யோகாசனம் செய்வதால் உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று கூறினார்.
No comments
Thank you for your comments