Breaking News

பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் 10 மணிக்கே மூடுவதால் விளையாட்டு வீரர்கள் ஏமாற்றம்

பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் விடுமுறை நாட்களில் 10 மணிக்கே மூடப்படுவதால் மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.


காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட  பழைய ரயில்வே சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் பலதரப்பட்ட விளையாட்டு வீரர்களை உருவாக்கிய பெருமைக்குரிய விளையாட்டு அரங்கம் தினந்தோறும் காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணியிலிருந்து ஆறு மணி வரையிலும் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் திறக்கப்பட்டு வருகின்றன.



கடன் செயலி (LOAN APP) மோசடி 
டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

அந்த வகையில் வாரத்தின் இறுதி நாட்கள் ஆன சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி விடுமுறை என்பதால் இவ்விரு நாட்களில் பள்ளி மாணவர்களும் பல்வேறு விளையாட்டுக்களில் விளையாடி மகிழ பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தை நாடி தங்களது விளையாட்டினை வெளிப்படுத்தி வருவர் மேலும் தனியார் பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை என்பதால் கூடுதலான மாணவர்கள் விளையாட்டு அரங்கை நோக்கி விளையாட செல்வர் அந்த வகையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாட்களிலும் 5 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மாவட்ட விளையாட்டு அரங்கம் திறந்து இருப்பதால் மாணவர்கள் விளையாட்டின் ஆர்வத்தோடு வருவர் விளையாட்டு அரங்கம் மூடப்படுவதால் ஏமாற்றம் அடைகின்றனர்.

இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் கூறுகையில்,  வாரம் முழுவதும் பத்து மணிக்கு மேல் உள்ளே விளையாட அனுமதி இல்லை என்றும் விடுமுறை நாட்களிலும் அவையே பின்பற்றுவதாகவும் தெரிவித்து மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை வெளியே அனுப்பி விளையாட்டு அரங்கிற்கு பூட்டு போட்டு விடுகின்றனர்.


இவற்றால் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதியில் பல கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வருகை புரியும் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் நீண்ட நேரம் விளையாடும் எண்ணத்தோடு மாவட்ட விளையாட்டு அரங்கத்தை நாடும்போது 10 மணிக்கு எல்லாம் பூட்டிவிட்டு வெளியே செல்ல சொல்வதால் மன உளைச்சலும் ஏமாற்றமும் அடைந்து தங்கள் பயிற்சி பெறும் விளையாட்டை முழுவதுமாக பயிற்சி பெறாமல் தடை ஏற்படுவதாக விளையாட்டு வீரர்கள் கூறுகின்றனர். 

மேலும் மாணவர்களும் விடுமுறை நாட்கள் என்பதால் நீண்ட நேரம் விளையாட்டில் பொழுது கழிக்கலாம் என மாவட்ட உள் விளையாட்டரங்கிற்கு செல்லும்போது 10 மணிக்கு எல்லாம் பூட்டை போட்டு வெளியேற்றுவது எங்களுக்கு விளையாட்டின் மீது உள்ள ஆர்வம் குறைய காரணமாக இவ் விளையாட்டு அரங்கம் அலுவலர்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கின்றனர்.

No comments

Thank you for your comments