Breaking News

திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மருத்துவர் P.செந்தில்குமார் நேரில் ஆய்வு

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு  திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மருத்துவர் P.செந்தில்குமார், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன்,  இ.ஆ.ப., ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.


இன்று (01.06.2023) காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மருத்துவர் பி.செந்தில்குமார், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு  திட்ட பணிகளை குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் கோவூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி துறை சார்பில், குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.72.50 இலட்சம் மதிப்பீட்டில் புதுவட்டாரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4 புதிய வகுப்பறைகள் கட்டும் கட்டிடப் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.24 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையற்கூடப் பணிகளையும், அங்கன்வாடி மையத்தினை பழுது பார்க்கும் பணிகளையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.91 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பள்ளி கழிப்பறை பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

மேலும், கரசங்கால் ஊராட்சியில் ரூ.76.16 இலட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமத்துவபுரம் புனரமைப்பு பணிகளையும், ரூ.69.17 இலட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பள்ளி கட்டிடம் மற்றும் நர்சரி அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனார்கள். குன்றத்தூர் ஊராட்சியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு சேமிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகளையும், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு,  அலுவலக ஆவணங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து, வைப்பூர் ஊராட்சியில் அமிர்தசரோவர் திட்டத்தின் கீழ் ரூ.23.96 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு புணரமைப்பு பணிகளையும்,  வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், நத்தாநல்லூர் ஊராட்சியில், வேளாண் துறை சார்பில் நடைபெறும் பணிகளையும், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

பின்பு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், கலைஞர் நகர்ப்புறம் மேம்பாட்டு திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்கள்.            

இவ் ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.அர்பிட்ஜெயின், இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜா.சரவணகண்ணன், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.நா.மா.கனிமொழி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.                                 

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments