பள்ளி வகுப்பறை கட்டடத்தையும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திறந்து வைத்தார்
ரூபாய் 53 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டவுள்ள இரு பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 18.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடத்தையும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திறந்து வைத்தார்.
அவ்வகையில் நடந்த 2021-22 ம் ஆண்டு ரூபாய் 18.79 லட்சம் மதிப்பீட்டில் சிறுகாவேரிப்பாக்கம் நடுநிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டுப்பட்டு பணிகள் நிறைவு பெற்ற நிலை இன்று அதனை மாணவர்கள் பயன்பாட்டிற்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.
இதேபோல் திருப்புகுழி ஊராட்சியில் கிராமப்புற நூலகம் அமைக்க ரூபாய் 35 லட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் துவக்க விழா நிகழ்ச்சியில் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கீழ்க்கதிர்பூர் தொடக்க வேளாண்மை வங்கியின் கீழ் புதிய நியாய விலை கட்டிடம் கட்ட ரூபாய் 18.10 லட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பூமி பூஜை பணிகளில் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்தியாசுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீதாசீனுவாசன் , வரதராஜன் , ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரேகா ஸ்டாலின், முட்டவாக்கம் மணோகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரமேஷ் , சுகுனாமேரி, திலகவதி குமரேசன், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.





No comments
Thank you for your comments