Breaking News

வெள்ளி ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து காட்சியளித்த காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ இரண்டாம் நாள் காலை உற்சவம்.. வெள்ளி ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து காட்சியளித்த காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள்.


108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம்  கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.



வைகாசி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் காலை உற்சவத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, மஞ்சள் பட்டு உடுத்தி மலர் மாலைகள் திருவாபரணங்கள் அணிவித்து வெள்ளி ஹம்ச வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர்.

பின்னர் மேளதாள, பேண்ட், வாத்தியங்கள், முழங்க, வேதப்பாராயண கோஷ்டியினர் பாடிவர, மயக்கும் மாலை வெயிலில் மஞ்சள் பட்டு உடுத்திய ஸ்ரீ வரதராஜ பெருமாள் வெள்ளி ஹம்ச வாகனத்தில், பாதம் தங்கிகள் தூக்கிச் செல்ல காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வெள்ளி ஹம்ச வாகனத்தில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

No comments

Thank you for your comments