காஞ்சிபுரம் ஸ்ரீகௌசிகேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்..
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வடக்கு மாட வீதியில் உள்ள பழமையும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ கௌசிகேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனையொட்டி யாகசால பூஜைகள் நிகழ் மாதம் 22ஆம் தேதி வியாழக்கிழமை அனுக்கை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகாபூர்ணாகுதி தீபாராதனைகள் நடைபெற்றன.
பின்னர் சிவாச்சாரியார்களால் புனித நீர் குடங்கள் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மூலவருக்கும், பரிவார மூர்த்தி களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனைகளும் நடைபெற்றன. யாகசாலை பூஜைகளை தேனுபுரி ஹேமநாத சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் நடத்தினார்கள்.
திருக்கோவில் திருப்பணிகளை கும்பாபிஷேக விழா குழு தலைவர் மகாலட்சுமி சுப்பிரமணியன் மற்றும் விழா குழுவினர்கள் நீலக்கல் சி என் ராமச்சந்திர சாஸ்திரிகள் ஆடிட்டர் சந்திர மௌலி சிங்கப்பூர் மீனாட்சி சுந்தரம் சென்னை குருமூர்த்தி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
கும்பாபிஷேக நிகழ்வை தொடர்ந்து காமாட்சி அம்பிகைக்கும் கௌசிகேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது
கும்பாபிஷேக விழாவில் தொல்லியல் துறை உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் இளநிலை பொறியாளர் சரவணன் கௌஷிகேஷ்வரர் கைங்கரிய சபா ஸ்தாபகர் தர்மலிங்கம் சிவாச்சாரியார் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments