Breaking News

கைலாசபுரம் சக்தி பீடம் சார்பாக "மரம் நடுதல் மற்றும் பாதுகாத்தல்" விழா

உலகம் முழுவதும் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தை சேர்ந்த செவ்வாடைத் தொண்டர்கள் ஜூன் 25-ஆம் தேதி இணைந்து ஒரு கின்னஸ் சாதனை முயற்சியாக "மரம் நடுதல் மற்றும் பாதுகாத்தல்" என்னும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினர். 


இந்தத் திட்டத்தின் கீழ் இயற்கையைப் பாதுகாக்கவும், உலகப் பருவநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் அருளாணையின் வண்ணம் செவ்வாடைத் தொண்டர்கள் இணைந்து 30,000-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு அதனை பாதுகாத்தலும்' செய்ய உள்ளார்கள்.

இந்த மாபெரும் நிகழ்ச்சியில் BHEL  குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கைலாசபுரம் ஆதிபாரசக்தி சித்தர் சக்திபீடத்தின் சார்பாக திருவெறும்பூர் பகுதியில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில்  மரக்கன்றுகளை நடுதல் மற்றும் பாதுகாத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொழிற்பயிற்சி வளாகத்தில் மரக்கன்றுகளை நடுவதோடு மட்டும் விட்டு விடாமல் அதனை நீர் ஊற்றிப் பாதுகாக்கும் முயற்சியினை மேற்கொள்ள இருக்கிறார்கள். 



அதற்காக அவர்கள் அவரவர் நட்ட மரத்தைப் பாதுகாப்பேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டதோடு, அதனை 3 மாதங்கள், 6 மாதங்கள், 9 மாதங்கள், ஒரு வருடம் என்று வளர்த்து, அதன் வளர்ச்சியைப் புகைப்படமாக எடுத்து ஆவணப்படுத்தவும் இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில்  கைலாசபுரம் சக்திபீட நிர்வாகிகள் சிவாலிங்கம், இராமசாமி. அகிலன், கண்ணன், செவ்வாடை தொண்டர்கள் மற்றும் மாணவ மாணவிகள்100க்கும் அதிகமானோர் கலந்துகொண்டார்கள். 




No comments

Thank you for your comments