கொரோனா காலகட்டத்தில் லைசால் வாங்கியதில் முறைகேடு... லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு
காஞ்சிபுரத்தில் பெருநகராட்சி கமிஷனராக பணியாற்றிய மகேஸ்வரி 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் லைசால் கொள்முதல் செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையராக மகேஸ்வரி கொரோனா காலகட்டத்தில் நடைபெற்ற லைசால் கொள்முதலில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக காஞ்சிபுரத்தில் திருக்காலிமேடு எம்ஜிஆர் நகர் மற்றும் களக்காட்டூர் பகுதியில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கடன் செயலி (LOAN APP) மோசடிடிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
கொரோனா காலகட்டத்தில் 1 கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு திண்டுக்கல் மாவட்டத்தில் லைசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது அரசு நிர்ணயித்த மதிப்பைவிட 32 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அதிகம் என கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூரில் துப்புரவு ஆய்வாளர் ரமேஷ்குமார் வீடு, திருக்காலிமேட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் ஜூனியர் அசிஸ்டெண்ட் சந்தவெளி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுதொடர்பாக தற்போது திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக உள்ள மகேஸ்வரியின் திண்டுக்கல் வீடு, பாண்டிச்சேரியில் துப்புரவு ஆய்வாளர் ராமகிருஷ்ணன், சென்னை வேப்பேரியில் துப்புரவு ஆய்வாளர் முகமது இக்பால் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
No comments
Thank you for your comments