காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையை ஆட்சியர் நேரில் ஆய்வு
இன்று (03.06.2023) காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள நுழைவு சீட்டு வழங்கும் மையத்தினையும், பின்பு நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பொது பிரிவு மையம் விபத்து பிரிவு, அவசரகால சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மையத்தையும், டயாலிஸிஸ் மையத்தையும், கண் சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டு, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார் கள். பின்பு இரத்த சேமிப்பு வங்கியும், நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் இடத்தையும் பார்வையிட்டு, மருந்து கையிருப்பை கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவமனையை சுற்றி பார்த்து சுகாதாரமாக வைக்கவும், பொதுப்பணி துறை மூலம் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்தும், மருத்துவமனைக்கு தேவையான உள்கட்டமைப்பு குறித்தும் மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இவ் ஆய்வின்போது இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மருத்துவர்.கோபிநாத், தலைமை மருத்துவர் திருமதி.கிருஷ்ணகுமாரி மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடன் இருந்தனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments
Thank you for your comments